அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளருக்கு ஒப்பந்தத்தை நீட்டிக்க முடிவு


அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளருக்கு ஒப்பந்தத்தை நீட்டிக்க முடிவு
x

கோப்புப்படம் 

அர்ஜென்டினா அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தலைமை பயிற்சியாளர் லயோனல் ஸ்காலோனியின் ஒப்பந்த காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.

பியூனஸ் அயர்ஸ்,

சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 36 ஆண்டுக்கு பிறகு மகுடம் சூடியது. அர்ஜென்டினா அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தலைமை பயிற்சியாளர் லயோனல் ஸ்காலோனியின் ஒப்பந்த காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் அவரது ஒப்பந்தத்தை மேலும் 4 ஆண்டுக்கு நீட்டிக்க அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் விரும்புகிறது. 'ஸ்காலோனி தொடர்ந்து அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக நீடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது அவர் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அவர் வந்த பிறகு ஒப்பந்தம் நீட்டிப்பு இறுதி செய்யப்படும்' என்று அர்ஜென்டினா கால்பந்து சம்மேளன தலைவர் கிளாடியோ தாபியா தெரிவித்தார்.


Next Story