ஆசிய ஹாக்கி விளையாட்டுப்போட்டி 2018: ஹாங்காங் சீனாவுடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணி மோதல்


ஆசிய ஹாக்கி விளையாட்டுப்போட்டி 2018: ஹாங்காங் சீனாவுடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணி மோதல்
x
தினத்தந்தி 18 July 2018 1:45 AM GMT (Updated: 18 July 2018 1:45 AM GMT)

ஆசிய ஹாக்கி விளையாட்டுப்போட்டியின் துவக்க ஆட்டத்தில் ஹாங்காங் சீனா அணியை இந்திய ஆடவர் ஹாக்கி அணி எதிர்கொள்கிறது. #AsianHockeyChampionship2018

புதுடெல்லி,

இந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டிகள் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெற உள்ள துவக்க ஆட்டத்தில் இந்திய அணி, ஹாங்காங் சீனாவை எதிர்கொள்கிறது. .

ஆண்கள் ஹாக்கி அணிகளின் ‘ஏ’ பிரிவில் இந்தியா, கொரியா, ஜப்பான், இலங்கை, ஹாங்காங் சீனா அணிகள் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம்  ஜப்பான் (ஆகஸ்ட் 24ம் தேதி), கொரியா( 26ம் தேதி),  இலங்கை (28ம் தேதி) ஆகிய அணிகளை இந்திய அணி எதிர்கொள்கிறது.

ஆண்கள் ஹாக்கி அணியின் ‘பி’ பிரிவில் மலேசியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஓமன், தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதே போல் ஹாக்கி மகளிர் அணியின் ‘ஏ’பிரிவில் சீனா, ஜப்பான், மலேசியா, ஹாங்காங் சீனா, தைபே உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மகளிர் பிரிவின் ‘பி’ பிரிவில் இந்தியா, கொரியா, தாய்லாந்து, கஜகஸ்தான், இந்தோனேஷியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது.

இதில் இந்திய மகளிரணி, இந்தோனேஷியா (ஆகஸ்ட் 19ம் தேதி), கஜகஸ்தான் (21ம் தேதி), கொரியா (25ம் தேதி), தாய்லாந்து (27ம் தேதி) அணிகளை எதிர்கொள்கிறது. 14 அணிகள் இடம் பெற்றுள்ள நிலையில் 14 நாள்களில் 60 ஆட்டங்கள் நடக்கின்றன.

ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, நேரடியாக 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story