ஹாக்கி

ஜூனியர் ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி + "||" + Juniar Hockey: In the final The Indian team failed

ஜூனியர் ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி

ஜூனியர் ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
6 அணிகள் இடையிலான 8–வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது.

ஜோஹர் பாரு, 

6 அணிகள் இடையிலான 8–வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2–3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு பட்டம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது. லீக் ஆட்டத்திலும் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தரப்பில் குர்சாஹிப்ஜித் சிங் 4–வது நிமிடத்திலும், அபிஷேக் 55–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேனியல் வெய்ட் 7–வது நிமிடத்திலும், ஜேம்ஸ் ஓட்ஸ் 39–வது மற்றும் 42–வது நிமிடத்திலும் கோல் திணித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி இந்திய அணி அறிவிப்பு
அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
2. மாநில ஆக்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி ‘சாம்பியன்’
இந்தியன் வங்கி சார்பில் 3–வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.
3. மாநில ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியன் வங்கி–ஐ.ஓ.பி.
இந்தியன் வங்கி சார்பில் 3–வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
4. தேசிய ஜூனியர் ஆக்கி: தமிழக அணி வெற்றி
ஆண்களுக்கான 9–வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி (ஏ டிவிசன்) மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில் நேற்று தொடங்கியது.
5. தபால் துறை ஆக்கி: கர்நாடக அணி ‘சாம்பியன்’
32–வது அகில இந்திய தபால் துறை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.