ஹாக்கி

உலக கோப்பை ஆக்கி: ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது, பிரான்ஸ் + "||" + World Cup Hockey Olympic champion to Argentina Shocked, France

உலக கோப்பை ஆக்கி: ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது, பிரான்ஸ்

உலக கோப்பை ஆக்கி: ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது, பிரான்ஸ்
16 அணிகள் இடையிலான 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

புவனேஸ்வரம்,

16 அணிகள் இடையிலான 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணி, 20–ம் நிலை அணியான பிரான்சை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 5–3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்து முதலாவது வெற்றியை பெற்றது. பிரான்ஸ் அணியில் ஹூகோ ஜெனிஸ்டெட் (18–வது நிமிடம்), விக்டர் சார்லெட் (23–வது நிமிடம்), அரிஸ்டிட் கோஸ்னி (26–வது நிமிடம்), பம்கார்டென் (30–வது நிமிடம்), பிராங்காய்ஸ் கோயெட் (54–வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். அர்ஜென்டினா அணி தரப்பில் கோன்சலே பெய்லாட் (2 கோல்), லுகாஸ் மார்ட்டினஸ் கோல் அடித்தனர். இந்த உலக கோப்பையில் அதிக கோல்கள் பொழிந்த (மொத்தம் 8 கோல்) ஆட்டம் இது தான். இதே பிரிவில் நடந்த நியூசிலாந்து–ஸ்பெயின் இடையிலான மோதல் 2–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

தோல்வி அடைந்தாலும் அர்ஜென்டினா அணி ‘ஏ’ பிரிவில் 6 புள்ளிகளுடன் (2 வெற்றி, ஒரு தோல்வி) முதலிடத்தை பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. பிரான்ஸ், நியூசிலாந்து (4 தலா புள்ளி) அணிகள் அடுத்து கால்இறுதிக்கான ‘கிராஸ்ஓவர்’ போட்டியில் விளையாடும். ஸ்பெயின் அணி (2 புள்ளி) வெளியேற்றப்பட்டது.

இன்று ‘சி’ பிரிவில் நடக்கும் லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா–சீனா (மாலை 5 மணி), அயர்லாந்து–இங்கிலாந்து (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. பிரான்சில் ரபேல் அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் எதுவும் திருடப்படவில்லை - இந்திய விமானப்படை
பிரான்சில் ரபேல் அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் எதுவும் திருடப்படவில்லை என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
2. உலக ஆக்கி தொடர்: இந்திய பெண்கள் அணி ‘சாம்பியன்’
பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிசுற்று போட்டி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆசிய சாம்பியனான ஜப்பானை எதிர்கொண்டது.
3. பெண்கள் உலக ஆக்கி தொடர்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
பெண்கள் உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடந்து வருகிறது.
4. பெண்கள் ஜூனியர் ஆக்கி: அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா
4 அணிகள் இடையிலான பெண்கள் ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடந்து வருகிறது.
5. உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று: இந்திய அணி அறிவிப்பு
உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் ஜூன் 6–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை நடக்கிறது.