அஸ்லான் ஷா ஆக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்திய அணி


அஸ்லான் ஷா ஆக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்திய அணி
x
தினத்தந்தி 26 March 2019 10:00 PM GMT (Updated: 26 March 2019 8:36 PM GMT)

6 அணிகள் இடையிலான 28–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடந்து வருகிறது.

இபோக், 

6 அணிகள் இடையிலான 28–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4–2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 2–வது வெற்றியை ருசித்தது. இந்திய அணி தரப்பில் சுமித் (17–வது நிமிடம்), சுமித் குமார் (27–வது நிமிடம்), வருண்குமார் (36–வது நிமிடம்), மன்தீப் சிங் (58–வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். மலேசிய அணியில் ராஸி ரஹிம் (21–வது நிமிடம்), முகமது பிர்ஹான் (57–வது நிமிடம்) தலா ஒரு கோல் திருப்பினார்கள்.

இன்று (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை (பிற்பகல் 3.35 மணி) சந்திக்கிறது.


Next Story