2023-ம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டி - ஒடிசாவில் நடைபெறும்


2023-ம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டி - ஒடிசாவில் நடைபெறும்
x
தினத்தந்தி 27 Nov 2019 11:16 PM GMT (Updated: 27 Nov 2019 11:16 PM GMT)

2023-ம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது.

புவனேசுவரம்,

15-வது ஆண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் உரிமத்தை சமீபத்தில் இந்தியா பெற்றது. இந்த நிலையில் இந்தியாவில் இந்த போட்டி 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், ‘2018-ம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டியை நாங்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். இப்போது 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி மீண்டும் புவனேசுவரம் மற்றும் ரூர்கேலாவில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்’ என்றார். நிகழ்ச்சியில் சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவர் நரிந்தர் பத்ரா, ஆக்கி இந்தியா தலைவர் முகமது முஷ்டாக் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story