ஹாக்கி

சர்வதேச ஹாக்கி விருதுகள்: ஆன்லைன் வாக்கெடுப்புக்கு கிளம்பும் எதிர்ப்பு + "||" + If fans had not voted the winners would have been the same says FIH CEO

சர்வதேச ஹாக்கி விருதுகள்: ஆன்லைன் வாக்கெடுப்புக்கு கிளம்பும் எதிர்ப்பு

சர்வதேச ஹாக்கி விருதுகள்: ஆன்லைன் வாக்கெடுப்புக்கு கிளம்பும் எதிர்ப்பு
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனை உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
லாசானே,

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனை உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த முறை வெற்றியாளர்களை தேர்வு செய்ய ‘ஆன்-லைன்’ மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனை உள்ளிட்ட விருதுக்கான பட்டியல் கடந்த வாரம்  வெளியானது.

இதில் தேசிய ஹாக்கி  அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் மற்றும் வீரர்கள், ஊடகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அளிக்கும் வாக்குகளின் சதவீதத்தை அடிப்படையாக கொண்டு விருதுக்கு தேர்வாகி இருக்கும் வீரர், வீராங்கனைகளின் பெயர் அறிவிக்கப்பட்டது.இதன்படி அனைத்து பிரிவுகளின் விருதுகளையும் இந்திய ஹாக்கி அணியினர் கைப்பற்றினர்.

இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை வரையறுக்கும் ஒரு விருதுக்கு ரசிகர்கள் வாக்களிப்பது உண்மையில் நல்ல யோசனையா என்று பலர்  கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் முதன்மை செயல் அதிகாரி  தியரி வெயில் கூறியதாவது :

 இந்த முறை ரசிகர்கள் வாக்களிக்கும் முறை இல்லாமல் இருந்து இருந்தாலும் முடிவுகள் வேறுபட வாய்ப்பில்லை.ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு விருப்பத்தை வழங்குவது அவசியம். அதை கருத்தில் கொண்டே ‘ஆன்-லைன்’ மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இந்த விஷயத்தில் தற்போதைய செயல்முறை சரியானதா இல்லையா என்று  நாம் நிச்சயமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மகளிர் ஹாக்கி புரோ லீக் :இந்தியா - ஸ்பெயின் அணிகள் தேர்வு
மாற்று அணிகளாக தரவரிசையில் அடுத்து இருக்கும் இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் தேர்வாகியுள்ளது
2. சர்வதேச விருது: இந்திய ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு
ரசிகர்கள் மூலம் தேர்வு செய்து வழங்கப்படும் இந்த விருதுகளில் இந்த முறை அதிகபட்சமாக 3,00,000 பேர் வாக்களித்துள்ளனர்.
3. காமன்வெல்த் போட்டிகள் 2022 :விலகியது இந்தியா ஹாக்கி அணி
இங்கிலாந்து அணி இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை தொடரை புறக்கணித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது
4. சர்வதேச ஹாக்கிப் போட்டிகளிலிருந்து ஓய்வு - இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங்
சர்வதேச ஹாக்கிப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய ஹாக்கி வீரர் ருபிந்தர் பால் சிங் அறிவித்துள்ளார்.
5. இந்திய ஆக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர் கொரோனாவால் பாதிப்பு
இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளருமான எம்.கே.கவுசிக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.