தேசிய பெண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் : உத்திரப்பிரதேசத்தில் நடைபெறுகிறது.


தேசிய பெண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் : உத்திரப்பிரதேசத்தில் நடைபெறுகிறது.
x
தினத்தந்தி 14 Oct 2021 11:46 AM GMT (Updated: 14 Oct 2021 11:46 AM GMT)

அக்டோபர் 27 ஆம் தேதி காலிறுதி போட்டிகளும் 29 ஆம் தேதி அரையிறுதி போட்டிகளும் நடைபெறுகிறது

ஜான்சி,உத்திரப்பிரதேசம் 

11வது சீனியர் பெண்கள் ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப் போட்டி உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் அக்டோபர் 21 முதல் 30 வரை நடைபெறுகிறது. இதில் 28 அணிகள் பங்கேற்கின்றன. பங்கேற்கும் 28 அணிகளும் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 21 ஆம் தேதி  தொடங்கும் லீக் போட்டிகள் 6 நாட்கள் நடைபெறுகிறது. அக்டோபர் 27 ஆம் தேதி காலிறுதி போட்டிகளும் 29 ஆம் தேதி அரையிறுதி போட்டிகளும் நடைபெறுகிறது. இறுதி போட்டி அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.

சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரர், பயிற்சியாளர், தொழில்நுட்ப அதிகாரிகளும் தாங்கள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுத்த  கோவிட் ஆர்டி-பிசிஆர்  நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் மொபைல் சாதனங்களில் ஆரோக்ய சேது செயலியை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  மைதானத்தை தவிர அனைத்து இடங்களிலும் அனைவரும் சமூக  இடைவெளியை  கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story