ஹாக்கி

ஜூனியர் பெண்கள் ஹாக்கி உலகக்கோப்பை : இந்திய அணியை வழிநடத்தும் ஒலிம்பிக் நட்சத்திரம் + "||" + Olympian Lalremsiami to lead India in women's junior hockey World Cup

ஜூனியர் பெண்கள் ஹாக்கி உலகக்கோப்பை : இந்திய அணியை வழிநடத்தும் ஒலிம்பிக் நட்சத்திரம்

ஜூனியர் பெண்கள் ஹாக்கி உலகக்கோப்பை : இந்திய அணியை வழிநடத்தும் ஒலிம்பிக் நட்சத்திரம்
டோக்கியோ இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் இருந்த சலிமா டெட் மற்றும் ஷர்மிளா தேவி ஆகியோரும் ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணியில் உள்ளனர்
டெல்லி 

பெண்கள் ஜூனியர் உலக கோப்பை  ஹாக்கி போட்டி  தென்னாப்பிரிக்காவில் அடுத்த மாதம்  5-ந் தேதி தொடங்குகிறது . இதில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா  உள்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் 18 வீரர்கள் அடங்கிய பட்டியலை ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ளது 

அதன்படி இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக  லால்ரெம்சியாமி  நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை  படைத்தது .அரையிறுதி வரை முன்னேறிய  இந்திய அணியில் இடம்பெற்று இருந்தவர்களில் 21 வயதான  லால்ரெம்சியாமியும் ஒருவர் ஆவார். 

இவர் மட்டுமின்றி டோக்கியோ இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் இருந்த சலிமா டெட் மற்றும் ஷர்மிளா தேவி ஆகியோரும் ஜூனியர் பெண்கள் ஹாக்கி  அணியில் உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : பயிற்சி முகாமில் இந்திய அணியினர்
ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி வங்காளதேசத்தின் டாக்காவில் அடுத்த மாதம் தொடங்குகிறது.
2. ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார் ஒலிம்பிக் நட்சத்திரம்
இந்தியா தனது முதல் போட்டியில் நவம்பர் 24 ஆம் தேதி பிரான்சு அணியை எதிர்கொள்கிறது
3. தேசிய பெண்கள் சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் :தங்க பதக்கம் வென்றது மத்திய பிரதேச அணி.
மத்திய பிரதேச அணி 1-0 என்ற கணக்கில் அரியானா அணியை வீழ்த்தி தங்க பதக்கத்தை தட்டி சென்றது
4. சர்வதேச ஹாக்கி விருதுகள்: ஆன்லைன் வாக்கெடுப்புக்கு கிளம்பும் எதிர்ப்பு
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனை உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
5. மகளிர் ஹாக்கி புரோ லீக் :இந்தியா - ஸ்பெயின் அணிகள் தேர்வு
மாற்று அணிகளாக தரவரிசையில் அடுத்து இருக்கும் இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் தேர்வாகியுள்ளது