பிற விளையாட்டு

ரஷிய ஒலிம்பிக் கமிட்டி மீதான தடை நீக்கம் + "||" + The ban on the Russian Olympic Committee

ரஷிய ஒலிம்பிக் கமிட்டி மீதான தடை நீக்கம்

ரஷிய ஒலிம்பிக் கமிட்டி மீதான தடை நீக்கம்
சோச்சியில் 2014–ம் ஆண்டு நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போது ஏராளமான ரஷிய வீரர், வீராங்கனைகள் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர்.

ஷூரிச்,

சோச்சியில் 2014–ம் ஆண்டு நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போது ஏராளமான ரஷிய வீரர், வீராங்கனைகள் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர். ஊக்கமருந்துகளை பயன்படுத்தி சாதிப்பதற்கு ரஷிய அரசே உதவியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சமீபத்தில் பியாங்சாங்கில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷியா பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அந்த நாட்டை சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக் கமிட்டி என்ற பொதுவான பெயரில் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ரஷிய ஒலிம்பிக் கமிட்டி மீதான தடையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.) நேற்று நீக்கியது. ஐ.ஓ.சி.யில் ரஷிய ஒலிம்பிக் கமிட்டிக்கான உறுப்பினர் அந்தஸ்து மறுபடியும் வழங்கப்பட்டு இருக்கிறது. பியாங்சாங் குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷிய தரப்பில் இருந்து கலந்து கொண்ட 168 வீரர், வீராங்கனைகளில் இருவர் மட்டுமே ஊக்கமருந்து பயன்படுத்தியதாக நடவடிக்கைக்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.