பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.

* இந்தியாவுக்கு எதிராக வருகிற 12-ந்தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தசைப்பிடிப்பு காயத்தால் ஆஸ்திரேலிய தொடரில் ஆடாத ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.

* 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஜூலை 21-ந் தேதி தொடங்குகிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ராணி ராம்பாலும், துணை கேப்டனாக சவிதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* 6 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை (இரவு 7.30 மணி) எதிர்கொள்கிறது. இதில் டிரா செய்தாலே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடலாம்.

* தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு அவர் 11.30 வினாடிகளில் இலக்கை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. சொந்த சாதனையை இப்போது முறியடித்து இருக்கிறார்.

* மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 22-20, 21-19 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) வெளிே-யேற்றி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-18, 21-14 என்ற நேர்செட் கணக்கில் பிரைஸ் விலெர்டெஸ்சை (பிரான்ஸ்) வென்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி 474 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
தஞ்சையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் 474 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
2. உலக அளவிலான யோகா போட்டியில் பங்கேற்ற சீர்காழி மாணவி தங்கம் வென்று சாதனை
உலக அளவிலான யோகா போட்டியில் சீர்காழி மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
3. திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட தடகள போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடந்த மாவட்ட தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
4. குறுஞ்சான்வயலில் கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு
அன்னவாசல் அருகே குறுஞ்சான்வயலில், கபடி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
5. புதுக்கோட்டையில் மண்டல அளவிலான நீச்சல் போட்டி
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருச்சி மண்டல அளவிலான நீச்சல் போட்டி புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று நடைபெற்றது.