பிற விளையாட்டு

முதல்-அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து: கோவை, ஈரோடு அணிகள் ‘சாம்பியன்’ + "||" + Volleyball for Cheif-Minister Cup: Coimbatore, Erode teams 'champion'

முதல்-அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து: கோவை, ஈரோடு அணிகள் ‘சாம்பியன்’

முதல்-அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து: கோவை, ஈரோடு அணிகள் ‘சாம்பியன்’
முதல்-அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டியில் கோவை, ஈரோடு அணிகள் சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கைப்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்த போட்டியில் எல்லா மாவட்ட அணிகளும் கலந்து கொண்டன. நேற்று நடந்த ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் கோவை மாவட்ட அணி 25-20, 25-17, 25-23 என்ற நேர்செட்டில் சென்னை மாவட்ட அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நெல்லை மாவட்ட அணி, கடலூரை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் பெற்றது. பெண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்தில் ஈரோடு மாவட்ட அணி நேர்செட்டில் சென்னை மாவட்ட அணியை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் காஞ்சீபுரம் அணி, சேலத்தை விரட்டியடித்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கியது. சாம்பியன் பட்டத்தை வென்ற அணியின் வீரர்-வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 லட்சமும், 2-வது இடம் பெற்ற அணியினருக்கு தலா ரூ.75 ஆயிரமும், 3-வது இடம் பெற்ற அணியினருக்கு தலா ரூ.50 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து: அரைஇறுதியில் தமிழக அணி
தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து போட்டியில், தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.
2. முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் - சென்னையில் இன்று தொடக்கம்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், சென்னையில் இன்று தொடங்க உள்ளன.
3. கோவை சிங்காநல்லூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
கோவை சிங்காநல்லூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
4. கோவையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை
கோவையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
5. திருப்பூர், கோவை தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவினாசி அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
திருப்பூர், கோவை தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவினாசி அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை