பிற விளையாட்டு

டேவிஸ் கோப்பை டென்னிசில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் ஆட்டம் நடைபெறுமா? + "||" + Davis Cup at Tennis, Will India-Pakistan team play?

டேவிஸ் கோப்பை டென்னிசில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் ஆட்டம் நடைபெறுமா?

டேவிஸ் கோப்பை டென்னிசில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் ஆட்டம் நடைபெறுமா?
டேவிஸ் கோப்பை டென்னிசில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் ஆட்டம் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

* டேவிஸ் கோப்பை டென்னிசில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் அடுத்த மாதம் 14 மற்றும் 15-ந்தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடக்கிறது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இரு நாட்டு உறவில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தாமாகவே முன்வந்து இந்த போட்டியை தள்ளி வைக்க வேண்டும் அல்லது வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று இந்திய டென்னிஸ் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


* இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் அளித்த ஒரு பேட்டியில், ‘அடுத்த 6 மாதங்களுக்குரிய போட்டி மட்டுமல்ல, என்னை பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது தான். ஒரு கிரிக்கெட் வீரராகவும், மனிதராகவும் முன்னேற்றம் காண விரும்புகிறேன். அதைத் தான் நான் எதிர்நோக்கி இருக்கிறேன். களத்தில் எனது இயல்பான, நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்’ என்றார்.

* சின்சினாட்டி மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்றில் தகுதிநிலை வீராங்கனை ஜரினா டியாசை (கஜகஸ்தான்) சந்திக்க இருந்த அமெரிக்க ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் முதுகுவலி காரணமாக கடைசி நேரத்தில் விலகியிருக்கிறார்.

* உடல்தகுதியுடன் தயாராக இருந்தும் இந்திய 20 ஓவர் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணியில் சேர்க்காதது ஏமாற்றம் அளிப்பதாக தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் கூறியுள்ளார். இந்தியாவுக்கு வர முடியாமல் போவதற்காக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடமும், மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் ஸ்டெயின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா, சீனா எங்களை புறக்கணிக்கிறது அவற்றை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை -டொனால்ட் டிரம்ப்
இந்தியா, சீனா எங்களை புறக்கணிக்கிறது அவற்றை வளரும் நாடுகளாக நாங்கள் கருதவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.
2. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க 5 தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி
தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் பொருட்டு, 5 தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
3. இந்தியா-பாகிஸ்தான் உறவு சிக்கல்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டனுக்கு இம்ரான்கான் விளக்கம்
இந்தியா-பாகிஸ்தான் உறவு சிக்கல் குறித்து இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டனுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விளக்கமளித்தார்.
4. பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்தியாவையும் இந்திய நாட்டினரையும் சிக்கவைக்க பாகிஸ்தான் திட்டம்
பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்தியாவையும் இந்திய நாட்டினரையும் சிக்கவைக்க பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
5. பிசிசிஐ-யின் தலைவராகிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி?
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.