பிற விளையாட்டு

புரோ கபடி லீக் போட்டி: மும்பையிடம் வீழ்ந்தது பாட்னா + "||" + Pro Kabaddi League match: Patna fall to Mumbai

புரோ கபடி லீக் போட்டி: மும்பையிடம் வீழ்ந்தது பாட்னா

புரோ கபடி லீக் போட்டி: மும்பையிடம் வீழ்ந்தது பாட்னா
புரோ கபடி லீக் போட்டியில், பாட்னாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.
ஆமதாபாத்,

புரோ கபடி லீக் போட்டியில் ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-மும்பை (யூ மும்பா) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி 34-30 என்ற புள்ளி கணக்கில் 3 முறை சாம்பியனான பாட்னாவை சாய்த்து 4-வது வெற்றியை ருசித்தது.


மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 22-19 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை தோற்கடித்து 6-வது வெற்றியை பதிவு செய்தது.