பிற விளையாட்டு

புரோ கபடி: ஜெய்ப்பூர், பெங்கால் அணிகள் வெற்றி + "||" + Pro Kabaddi: Jaipur, Bengal teams win

புரோ கபடி: ஜெய்ப்பூர், பெங்கால் அணிகள் வெற்றி

புரோ கபடி: ஜெய்ப்பூர், பெங்கால் அணிகள் வெற்றி
புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர், பெங்கால் அணிகள் வெற்றிபெற்றன.
ஜெய்ப்பூர்,

7-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 107-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 43-34 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவு செய்தது. தீபக் ஹூடா (12 புள்ளி), தீபக் நார்வல் (11 புள்ளி) ஜெய்ப்பூர் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர்.


முன்னதாக நடந்த மற்றொரு திரிலிங்கான ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 40-39 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை போராடி தோற்கடித்தது. பெங்கால் வீரர் மனிந்தர்சிங், ‘ரைடு’ மூலம் 17 புள்ளிகள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார். 19-வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் வாரியர்ஸ் 12 வெற்றி, 4 தோல்வி, 3 சமன் என்று 73 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. இன்றைய லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-தபாங் டெல்லி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடியில் மகுடம் சூடப்போவது யார்? பெங்கால்-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை
புரோ கபடி போட்டியில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பெங்கால்-டெல்லி அணிகள் மோதுகின்றன.
2. புரோ கபடி போட்டி: இறுதிப்போட்டியில் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ்
புரோ கபடியில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
3. புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
புரோ கபடி போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெற்றன.
4. புரோ கபடி: கடைசி லீக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வி
புரோ கபடி: கடைசி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்தது.
5. புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி
புரோ கபடி போட்டியில், பெங்களூரு, மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றன.