பிற விளையாட்டு

இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத்துக்கு கொரோனா பாதிப்பு - தாய்லாந்து ஓபனில் இருந்து விலகினார் + "||" + Corona injury to Indian badminton player Sai Praneeth - withdraws from Thailand Open

இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத்துக்கு கொரோனா பாதிப்பு - தாய்லாந்து ஓபனில் இருந்து விலகினார்

இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத்துக்கு கொரோனா பாதிப்பு - தாய்லாந்து ஓபனில் இருந்து விலகினார்
இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் தாய்லாந்து ஓபனில் இருந்து விலகியுள்ளார்.
பாங்காக்,

டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலாவது சுற்றில் நேற்று களம் இறங்க இருந்த இந்திய வீரர் சாய் பிரனீத்துக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. 

இதனால் அவர் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். குறைந்தது அவர் 10 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பார் என்று உலக பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சாய் பிரனீத்துடன் ஒரே அறையில் தங்கியிருந்த இந்திய முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்ரீகாந்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவரும் வேறுவழியின்றி போட்டியில் இருந்து விலகி உள்ளார்.