பிற விளையாட்டு

இந்திய முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனே கொரோனாவில் இருந்து மீண்டார் + "||" + Former Indian badminton player Prakash Padukone has recovered from the corona

இந்திய முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனே கொரோனாவில் இருந்து மீண்டார்

இந்திய முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனே கொரோனாவில் இருந்து மீண்டார்
இந்திய பேட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோனே 10 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

அவரது மனைவி, மகளும் பாதிப்புக்குள்ளானார்கள். இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு காய்ச்சல் குறையவில்லை. இதனால் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரகாஷ் படுகோனே சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று தற்போது பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் அவர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுவார் என்று அவரது நெருங்கிய நண்பரும், பிரகாஷ் படுகோனே பேட்மிண்டன் அகாடமி இயக்குனருமான விமல்குமார் தெரிவித்தார். 65 வயதான பிரகாஷ் படுகோனே ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை ெவன்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இதே போல் 1983-ம் ஆண்டு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.