இந்தியாவின் 22வது பெண் செஸ் கிராண்ட்மாஸ்டர் : திவ்யா தேஷ்முக் சாதனை


இந்தியாவின் 22வது பெண் செஸ் கிராண்ட்மாஸ்டர் : திவ்யா தேஷ்முக் சாதனை
x
தினத்தந்தி 14 Oct 2021 10:38 AM GMT (Updated: 14 Oct 2021 10:38 AM GMT)

17.7 சர்வதேச செஸ் புள்ளிகள் பெற்று சர்வதேச செஸ் மாஸ்டர் என்னும் பெருமையையும் பெற்றுள்ளார்

ஹங்கேரி 

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடந்த செஸ் தொடரில் இந்தியாவின்  திவ்யா தேஷ்முக் நாட்டின்  22வது பெண் செஸ் கிராண்ட்மாஸ்டர் என்னும் பெருமையை பெற்றுள்ளார். 16 வயதான  திவ்யா தேஷ்முக் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்.

செஸ் போட்டிகளில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் மிக உயரிய ஒன்றாக கருதப்படுகிறது. ஆண்கள் பிரிவில் இந்த தகுதியை பெற ஒருவர் 2500 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற வேண்டும் . அதே போல் பெண்கள் பிரிவில்  இந்த தகுதியை பெற ஒருவர் 2300 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற வேண்டும்.

 இந்தியாவின்  திவ்யா தேஷ்முக் புடாபெஸ்டில் நடந்த செஸ் தொடரில் 2452 புள்ளியை எட்டினார் . அது மட்டுமின்றி 17.7 சர்வதேச செஸ் புள்ளிகள் பெற்று சர்வதேச செஸ் மாஸ்டர் என்னும்  பெருமையையும் பெற்றுள்ளார். 

இது குறித்து  திவ்யா தேஷ்முக் கூறியதாவது :

பெண் செஸ் கிராண்ட்மாஸ்டர் மற்றும் சர்வதேச செஸ் மாஸ்டருக்கான விதிமுறைகளை நிறைவு செய்துள்ளேன் . கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு பல மாதங்களாக சர்வதேச செஸ் தொடர்களில் பங்கேற்காமல் இருந்தேன். 19 மாதங்களுக்கு பிறகு இந்த தொடரில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது  மகிழ்ச்சி அளிக்கிறது. இனி வரும் தொடர்களில் மேலும் சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன்.

இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

Next Story