ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 பதக்கம்


ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 பதக்கம்
x
தினத்தந்தி 11 May 2022 8:37 PM GMT (Updated: 11 May 2022 8:37 PM GMT)

இறுதிப்போட்டியில் ருத்ராங்ஷ் பாலசாஹிப் பட்டீல் 17-13 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

புதுடெல்லி,

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இறுதி வெளியேற்றுதல் சுற்று முடிவில் இந்திய வீரர்கள் ருத்ராங்ஷ் பாலசாஹிப் பட்டீல் 260.9 புள்ளிகளுடனும், அபினவ் ஷா 257.7 புள்ளிகளுடனும் இறுதிபோட்டிக்குள் நுழைந்தனர். 

விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ருத்ராங்ஷ் பாலசாஹிப் பட்டீல் 17-13 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அபினவ் ஷா வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஜெர்மனி வீரர் நில்ஸ் பால்பெர்க் வெண்கலப்பதக்கம் பெற்றார். 

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை ரமிதா 8-16 என்ற புள்ளி கணக்கில் நடப்பு ஜூனியர் உலக சாம்பியனான பிரான்சின் ஓசியன் முல்லெரிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். இந்த போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 3 பதக்கம் அறுவடை செய்து பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Next Story