அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இந்திய கடற்படை அணி சாம்பியன்


அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இந்திய கடற்படை அணி சாம்பியன்
x

கரூரில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்திய கடற்படை அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

கரூர்:

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் எல்.ஆர்.ஜி. நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி கரூர் திருவள்ளூவர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 21-ந்தேதி தொடங்கி 7 நாட்கள் இரவு, பகலாக லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடந்தது.

இதில், இந்தியகடற்படை அணி, இந்தியன் வங்கி அணி, இந்தியன் ஆர்மி அணி, ஏர்போர்ட்ஸ் அணி உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பின்னர் நடந்த இறுதி போட்டியில் இந்திய கடற்படை அணியும், இந்தியன் வங்கி அணியும் மோதின. இதில் இந்திய கடற்படை அணி 92- 75 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியன் வங்கி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இந்தியன் வங்கி அணி 2-வது இடம் பிடித்தது. 3-வது இடத்தை சென்னை விளையாட்டு விடுதி அணியும், 4-வது இடத்தை இந்தியன் ஏர்போர்ட்ஸ் அணியும் பெற்றன.

இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு, முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும், 2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும், 3-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும், 4-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.20 ஆயிரம் சுழற்கோப்பையும் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை கூடைப்பந்தாட்ட கழக தலைவர் பாஸ்கர், செயலாளர் முகமது கமால்தீன், துணைத்தலைவர் சூரியநாராயணன், பொருளாளர் அணீஸ் பெரியசாமி உள்பட கூடைப்பந்தாட்ட கழக குழுவினர் செய்திருந்தனர்.


Next Story