தோஹா டைமண்ட் லீக்: இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்


தோஹா டைமண்ட் லீக்: இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 5 May 2023 6:18 PM GMT (Updated: 5 May 2023 6:28 PM GMT)

நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்தார்.

தோஹா,

கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் முதல் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். 2022 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற சோப்ரா, இந்த முறையும் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். செக் குடியரசு வீரர் ஜேக்கப் வேட்லக்(88.63 மீட்டர்) இரண்டாவது இடத்தையும், கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ்(85.88 மீட்டர்) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.


Next Story