சுவிட்சர்லாந்தின் டயமண்ட் லீக் மீட் தொடர்: வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா


சுவிட்சர்லாந்தின் டயமண்ட் லீக் மீட் தொடர்: வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா
x
தினத்தந்தி 26 Aug 2022 10:37 PM GMT (Updated: 26 Aug 2022 10:38 PM GMT)

சுவிட்சர்லாந்தின் டயமண்ட் லீக் மீட் தொடரில், பட்டம் வென்று நீரஜ் சோப்ரா வரலாறு படைத்தார்.

லாசேன்,

சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டயமண்ட் லீக் மீட் சர்வதேச தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

இந்நிலையில் நீரஜ் சோப்ரா 89.08 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்தப் போட்டியின் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், அடுத்ததாக ஜூரிச்சில் செப்டம்பர் 7-8 தேதிகளில் நடைபெற உள்ள டையமண்ட் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தநிலையில், நீரஜ் சோப்ரா டயமண்ட் லீக் பைனலுக்கும் தகுதி பெற்றுள்ளார்.

முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் 88.13 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார் நீரஜ் சோப்ரா.


Next Story