டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை


டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை
x

டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.

பெர்ன்,

சுட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தளகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

இறுதிச்சுற்றில் முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். இதன் மூலம் அதிக தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன் மூலம் டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து நீரஜ் சோப்ராவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story