உயரம் குறைந்தோருக்கான விளையாட்டுப் போட்டி; தேர்வான தமிழக வீரர்களுக்கு ரூ.7½ லட்சம் நிதி உதவி - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்


உயரம் குறைந்தோருக்கான விளையாட்டுப் போட்டி; தேர்வான தமிழக வீரர்களுக்கு ரூ.7½ லட்சம் நிதி உதவி - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
x

உயரம் குறைந்தோருக்கான விளையாட்டு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பங்கேற்க உள்ளனர்.

சென்னை,

8-வது உலக உயரம் குறைந்தோருக்கான விளையாட்டு போட்டி ஜெர்மனியின் கெலோனில் அடுத்த மாதம் (ஜூலை) 30-ந்தேதி முதல் ஆகஸ்டு 5-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த செல்வராஜ் அழகப்பன் (புதுக்கோட்டை), கணேசன் கருப்பையா, மனோஜ் சிங்கராஜா (இருவரும் மதுரை) ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள்.

இவர்கள் 3 பேருக்கும் போட்டிக்கான நுழைவுக்கட்டணம், விமானக்கட்டணம், உள்ளூர் போக்குவரத்து கட்டணம், விசா செலவுகள் மற்றும் சீருடை செலவினம் ஆகியவற்றுக்கான தொகையாக தலா ரூ.2,49,200 என மொத்தம் ரூ.7,47,600-க்கான நிதி உதவியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி, சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story