டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா அதிர்ச்சி தோல்வி + "||" + Cincinnati Open Tennis: Spain's player mukuruja Shock defeat

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா அதிர்ச்சி தோல்வி
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் நேரடியாக விளையாட வாய்ப்பு பெற்ற நடப்பு சாம்பியனும், 2 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), 44-ம் நிலை வீராங்கனையான லிசி சுரென்கோவை (உக்ரைன்) எதிர்கொண்டார்.


விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கார்பின் முகுருஜா 6-2, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் லிசி சுரென்கோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), அனெட் கோன்டாவிட் (எஸ்தோனியா), விம்பிள்டன் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), ஆஷ்லே பார்ட்டி (ஆஸ்திரேலியா), மகரோவா (ரஷியா), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), அரினா சபலென்கா (பெலாரஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 55-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ் 5-7, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா) 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் அட்ரியன் மன்னாரினோவை தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார்.