டென்னிஸ்

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ‘நம்பர் ஒன்’ வீராங்கனைக்கு அதிர்ச்சி அளித்தார், பெர்டென்ஸ் + "||" + Tennis Championship Tournament Number One sportswoman Shock gave pertens

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ‘நம்பர் ஒன்’ வீராங்கனைக்கு அதிர்ச்சி அளித்தார், பெர்டென்ஸ்

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ‘நம்பர் ஒன்’ வீராங்கனைக்கு அதிர்ச்சி அளித்தார், பெர்டென்ஸ்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்டிக்கு, மாற்று வீராங்கனை கிகி பெர்டென்ஸ் அதிர்ச்சி அளித்து அசத்தினார்.
ஷென்ஜென், 

உலக தரவரிசையில் முன்னணி 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. மொத்தம் ரூ.99 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு ரவுண்ட்-ராபின் முறையில் மோதுகிறார்கள்.

‘ரெட்’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா வலது தோள்பட்டையில் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். ‘ஆண்டின் கடைசியில் நடக்கும் மிகப்பெரிய தொடரான இதில் ஏமாற்றத்துடன் விலகுகிறேன். அடுத்த ஆண்டு இந்த போட்டிக்கு மீண்டும் திரும்புவேன் என்று நம்புகிறேன்’ என்று ஒசாகா தெரிவித்தார்.

ஒசாகாவுக்கு பதிலாக மாற்று வீராங்கனையாக உலக தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் கிகி பெர்டெர்ன்ஸ் (நெதர்லாந்து) சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் நேற்று தனது முதல் ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் ஆஷ்லி பார்டியை (ஆஸ்திரேலியா) எதிர்கொண்டார். 2 மணி 9 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் கிகி பெர்டென்ஸ் 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆஷ்லி பார்டிக்கு அதிர்ச்சி அளித்தார். ஆஷ்லி பார்டியை, பெர்டென்ஸ் வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு அவருக்கு எதிராக விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டிருந்தார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) 6-3, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான பெட்ரா கிவிடோவாவை (செக்குடியரசு) தோற்கடித்து முதலாவது வெற்றியை பெற்றார். கிவிடோவா சந்தித்த 2-வது தோல்வியாகும். ஆனாலும் அவர் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறார்.

இந்த பிரிவில் நாளை நடக்கும் கடைசி கட்ட லீக் ஆட்டங் களில் பென்சிச்-கிகி பெர்டென்ஸ், ஆஷ்லி பார்டி- கிவிடோவா ஆகியோர் மோதுகிறார்கள். இந்த ஆட்டங்களின் முடிவை பொறுத்தே அரை இறுதிக்கு தகுதி பெறும் 2 வீராங்கனைகள் விவரம் தெரிய வரும்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில், மகளிர் தினத்தையொட்டி விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கரூரில், மகளிர் தினத்தை யொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
2. சேலத்தில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி
சேலம் கல்வி மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
3. மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி 7-ந் தேதி நடக்கிறது
மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
4. தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பரிசு வழங்கினார்.
5. சேலத்தில் மண்டல விளையாட்டு போட்டி 270 மாணவர்கள் பங்கேற்பு
சேலத்தில் நடந்த மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் 270 மாணவர்கள் பங்கேற்றனர்.