சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

image courtesy; AFP

தினத்தந்தி 16 Aug 2023 6:57 AM GMT (Updated: 16 Aug 2023 7:04 AM GMT)

ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 2-வது சுற்று போட்டியில் கரோலின் கார்சியாவை வீழ்த்தினார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு வீராங்கனையான நடப்பு சாம்பியன் கரோலின் கார்சியா, அமெரிக்க வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை கரோலின் கார்சியா கைப்பற்றினார். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக கடைசி 2 செட்டை இழந்து தோல்வி அடைந்தார். 2 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 4-6, 6-4 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இந்த தோல்வியின் மூலம் நடப்பு சாம்பியன் கரோலின் கார்சியா சின்சினாட்டி ஓபனிலிருந்து 2-வது சுற்றுடன் வெளியேறினார்.


Next Story