சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் ஜோடி தோல்வி


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் ஜோடி தோல்வி
x

Image Courtesy : @CincyTennis twitter

ஜோகோவிச்-நிகோலா ஜோடி 4-6, 2-6 என்ற நேர்செட்டில் ஜாமி முர்ரே-மிக்கேல் வீனஸ் இணையிடம் பணிந்தது.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) பயிற்சிக்காக சக நாட்டு வீரர் நிகோலா காசிச்சுடன் இணைந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் களம் இறங்கினார். இதன் முதல் சுற்றில் ஜோகோவிச்-நிகோலா ஜோடி 4-6, 2-6 என்ற நேர்செட்டில் ஜாமி முர்ரே (இங்கிலாந்து)-மிக்கேல் வீனஸ் (நியூசிலாந்து) இணையிடம் பணிந்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 38-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 6-ம் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான கரோலின் கார்சியாவை (பிரான்ஸ்) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 2 மணி 20 நிமிடம் நடந்தது

மற்றொரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 6-3, 6-7 (2-7), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் 28-ம் நிலை வீராங்கனையான கலினினாவை (உக்ரைன்) சாய்த்தார்.


Next Story