சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கார்சியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கார்சியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

image courtesy: Western & Southern Open twitter

நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கரோலின் கார்சியா, சபலென்காவுடன் மோதினார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பிரான்சு வீராங்கனை கரோலின் கார்சியா, பெலாரஸ் வீராங்கனை சபலென்காவுடன் மோதினார்.

இந்த போட்டியில் கார்சியா 6-2, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 6-7 (6-8), 6-4,6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிசன் கீசை போராடி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இந்த நிலையில் இறுதி போட்டியில் கரோலின் கார்சியா, கிவிடோவாவுடன் மோத உள்ளார்.


Next Story