சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிச்செனோக் - ஜெலினா இணை சாம்பியன்..!


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிச்செனோக் - ஜெலினா இணை சாம்பியன்..!
x

image courtesy: Western & Southern Open twitter

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் கிச்செனோக் - ஜெலினா இணை சாம்பியன் பட்டத்தை வென்றது.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் லியுட்மிலா கிச்செனோக் (உக்ரைன்) - ஜெலினா ஓஸ்டாபென்கோ (லாட்வியா) இணை, நிக்கோல் மெலிச்சார் மார்டினெஸ் (அமெரிக்கா) - எலன் பெரெஸ் (ஆஸ்திரேலியா) இணையுடன் மோதியது.

இந்த போட்டியில் கிச்செனோக் - ஜெலினா இணை 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் மார்டினெஸ் - எலன் பெரெஸ் இணையை வீழ்த்தியது. இதையடுத்து பெண்கள் இரட்டையர் பிரிவில் கிச்செனோக் - ஜெலினா இணை சாம்பியன் பட்டத்தை வென்றது.


Next Story