ரசிகர்களின் பாராட்டு மழையில் குளிர்ந்து போன அனிகா
‘போட்டோஷூட்’ மூலம் ரசிகர்களை அசத்தி வருகிறார், இளம் நடிகை அனிகா சுரேந்தர். ரசிகர்கள் நயன்தாரா போல இருப்பதாக அவரை பாராட்டி வருகிறார்கள்.;
படவாய்ப்பு இல்லாத சூழலில் பல்வேறு கோணங்களில் விதவிதமாக தங்களை புகைப்படம் எடுத்து வெளியிடுவது நடிகைகளின் வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது அதுவே மிகப்பெரிய பொழுதுபோக்காகவும் மாறிவிட்டது.
அந்தவகையில், ‘போட்டோஷூட்’ மூலம் ரசிகர்களை அசத்தி வருகிறார், இளம் நடிகை அனிகா சுரேந்தர். 2015-ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷாவின் மகளாக அனிகா நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதனைத்தொடர்ந்து ‘நானும் ரவுடிதான்’, ‘மிருதன்’, ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். அவருக்கு 18 வயது ஆகிறது.
தற்போது படங்களில் நடிக்காவிட்டாலும் ‘போட்டோஷுட்’கள் மூலம் எல்லோரையும் அசத்தி வருகிறார். சமீபத்தில் கடல் அலை பின்னணியில் புடவை கட்டி கலக்கலாக எடுத்த புகைப்படங்களை தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் அனிகா வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா போல இருப்பதாக அவரை பாராட்டி வருகிறார்கள். இந்த பாராட்டுகளால் அனிகா குளிர்ந்து போயிருக்கிறார்.