ஆஸ்கர் விருது வென்ற கீரவாணிக்கு சல்யூட் அடித்த ரஜினி

ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.;

Update:2023-03-13 16:05 IST

சென்னை,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' (The Elephant Whisperers) என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

மேலும் சிறந்த பாடலுக்கான விருதை டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில் இசையமைப்பாளர் கீரவாணி இசையில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலும் வென்றுள்ளது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பெருமைக்குரிய ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ள கீரவாணி, ராஜமவுலி, கார்திகி குன்செல்வெஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பெருமை மிக்க இந்தியர்களுக்கு எனது சல்யூட்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்