ரசிகர்களை தவறாக வழிநடத்துகிறார் - சமந்தா மீது கல்லீரல் நிபுணர் குற்றச்சாட்டு

யூடியூப்பில் உடல்நலம் சார்ந்த போட்காஸ்ட் ஒன்றை வெளியிட்டு , அதற்கு 'டேக் 20: ஹெல்த் பாட்காஸ்ட் தொடர்' என்று பெயரிட்டுள்ளார் நடிகை சமந்தா.

Update: 2024-03-14 11:26 GMT

நடிகை சமந்தா, ஹெல்த் பாட்காஸ்ட் தொடருக்காக ஆரோக்கியப் பயிற்சியாளரும் ஊட்டச்சத்து நிபுணருமான அல்கேஷ் ஷரோத்ரியுடன் இணைந்து உடல்நலப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார். இதற்கிடையில், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த டேன்டேலியன் என்ற மூலிகை மருந்து சிறந்தது என்று இவர்கள் கூறிய கருத்துக்கு மருத்துவ சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடிகை சமந்தா மற்றும் அல்கேஷ் ஆகியோர் தவறான தகவலை வழங்கி ரசிகர்களை தவறாக வழிநடத்துவதாக "TheLiverDoc" என்ற பெயரில் அழைக்கப்படும் கல்லீரல் நிபுணர் டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார். அறிவியல் படிக்காத இரண்டு நபர்கள் தங்கள் அறியாமையை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆரோக்கிய பயிற்சியாளர் உண்மையான மருத்துவர் இல்லை. கல்லீரலின் செயல்பாடுகள் பற்றி எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை என குற்றம் சாட்டினார்.

"நடிகை சமந்தா "கல்லீரல் நச்சு நீக்குதல்" குறித்து ஹெல்த் பாட்காஸ்ட் தொடரில் தவறான தகவலை அளித்துள்ளார். இவர்க்ளுக்கு கல்லீரலின் செயல்பாடுகள் பற்றி தெரியவில்லை. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த மூலிகை டேன்டேலியன். நான் ஒரு கல்லீரல் மருத்துவர், பயிற்சி பெற்ற மற்றும் பதிவுசெய்துள்ள ஒரு ஹெபடாலஜிஸ்ட். நான் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சையளித்து வருகிறேன். டேன்டேலியன் மருந்தை மனிதர்களுக்கு வழங்கி அதன் பலன்கள் குறித்த ஆதாரங்கள் இல்லாததால் அதை சிகிச்சைக்காக பரிந்துரைக்க முடியாது" என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்