இந்த 'சார்பட்டா 'பட வில்லனை நினைவிருக்கிறதா?...இவரது மனைவி ஒரு பிரபல நடிகை - யார் அவர் தெரியுமா?

அந்த நடிகை தமிழில் " காதலில் சொதப்புவது எப்படி", "பீட்சா", " நண்பேன்டா", "காஞ்சனா 2" போன்ற படங்களில் நடித்தவர்.;

Update:2025-12-26 18:50 IST

சென்னை,

திரைப்படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர்கள் பலர் உள்ளனர். ஜான் கொக்கன் அவர்களில் ஒருவர். இவர் கேஜிஎப் சாப்டர் 1, வீர சிம்ஹா ரெட்டி , சார்பட்டா பரம்பரை , துணிவு, கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

தற்போது, அவர் ஒரு சில படங்களில் பிஸியாக இருக்கிறார். ஆனால் உங்களுக்குத் தெரியுமா..?, இந்த நடிகரின் மனைவி ஒரு பிரபல நடிகை. ஆம், ஜான் கொக்கன் ஒரு கதாநாயகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர் பெயர் பூஜா ராமச்சந்திரன் இவர் தமிழில் " காதலில் சொதப்புவது எப்படி", "பீட்சா", " நண்பேன்டா", மற்றும் "காஞ்சனா 2" போன்ற படங்களில் நடித்தவர். பூஜா ராமச்சந்திரன், படங்களில் பிஸியாக இருந்தபோது, 2010 -ல் வி.ஜே. கிரெப் என்பவரை மணந்தார். ஆனால் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

சிறிது காலத்திற்குப் பிறகு, பூஜா ஜான் கொக்கனை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கியான் கொக்கன் என்ற மகன் உள்ளார். பூஜா தற்போது படங்களில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால் ஜான் தொடர் படங்களில் பிஸியாக இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்