விமல் நடித்துள்ள 'போகுமிடம் வெகு தூரமில்லை' படத்தின் டிரைலர் வெளியானது

அறிமுக இயக்குனர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் விமல் நடித்துள்ள திரைப்படம் 'போகுமிடம் வெகு தூரமில்லை'.

Update: 2024-05-25 02:39 GMT

சென்னை,

நடிகர் விமல் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம், 'போகுமிடம் வெகுதூரமில்லை'. அறிமுக இயக்குனர் மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் மெரி ரிக்கெட்ஸ் நாயகியாக நடித்துள்ளார். மேலும், கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ள இந்த படத்துக்கு டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விமல் அமரர் ஊர்தி ஓட்டும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.Full View

Tags:    

மேலும் செய்திகள்