ஒப்பிடுதல் வேண்டாமே...

உங்களது திறமைகளைக் கொண்டு, நேர்மறை எண்ணத்தோடு எதையும் அணுக ஆரம்பித்தால், உங்கள் மதிப்பை உணர்ந்து உற்சாகமாக செயல்பட முடியும். இதுவே வெற்றிக்கான திறவுகோலாக அமையும்.

Update: 2022-02-28 05:30 GMT
வ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு.அவற்றை உணர்ந்து செயல்பட்டால் மகிழ்ச்சியாக வாழ முடியும். இதை அறியாமல், பல பெண்கள் அடுத்தவர்களின் பலத்துடன், தங்களின் பலவீனத்தை ஒப்பிட்டுப் பார்த்து வருத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக அவர்களது மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் குறைகிறது.

உங்களது திறமைகளைக் கொண்டு, நேர்மறை எண்ணத்தோடு எதையும் அணுக ஆரம்பித்தால், உங்கள் மதிப்பை உணர்ந்து உற்சாகமாக செயல்பட முடியும். இதுவே வெற்றிக்கான திறவுகோலாக அமையும்.

உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடத் தொடங்கும்போது மிகுந்த கவனம் வேண்டும். அந்த சமயத்தில் நீங்கள் விரும்பும் விஷயங்கள், உங்களிடம் உள்ள திறமைகள், வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த நன்மைகள், உங்களைச் சுற்றி உள்ள நல்ல மனிதர்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்குங்கள். அதன் விளைவாக, அடுத்தவரோடு உங்களை ஒப்பிடுவதில் இருந்து மனதை திசைத் திருப்ப முடியும்.

வாழ்க்கைப் பயணத்தில் நாம் எங்கு செல்ல வேண்டும்? எதைச் செய்ய வேண்டும்? என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று சிந்தித்துக்கொண்டு இருந்தால், நமது இலக்கை அடைய முடியாது.

உங்கள் பலவீனத்தை எண்ணி கவலைப்படாமல், நேர்மறை ஆற்றல்கள், திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். அவற்றை உங்கள் நன்மைக்காகப் பயன்படுத்துங்கள். 

மேலும் செய்திகள்