வசதியான நாற்காலியை தேர்வு செய்ய உதவும் டிப்ஸ்

முதுகெலும்பின் கீழ்ப்பகுதி நாற்காலியில் வசதியாக பொருந்தும்படி நாற்காலியின் வடிவமைப்பு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மணிக்கணக்காக உட்காருபவர்களின் முதுகெலும்பின் இயல்பான வளைவு நாளடைவில் பாதிக்கப்படக்கூடும். அதனால், நாற்காலி தக்க உயரம், அமரும் நிலை, சாயும் நிலை ஆகியவற்றில் முதுகெலும்புக்கு ஓய்வளிக்கும்படி இருப்பது அவசியம்.

Update: 2022-05-02 05:30 GMT
ன்றாட பணிகளை உட்கார்ந்தபடியே செய்வதற்கும், ஓய்வாக அமர்வதற்கும் நாற்காலிகள் பயன்படுகின்றன. உடல் அமைப்புக்கு பொருந்தாத நாற்காலியில் உட்காருபவர்களுக்கு முதுகுவலி, கால்வலி, கழுத்து வலி போன்ற சிக்கல்கள் உருவாகக்கூடும்.

நாற்காலியில் அமரும்போது பாதங்களை தரையில் வைத்துக்கொள்ளும் வகையில் அதன் உயரம் இருக்க வேண்டும். இல்லாவிடில், கால் தசைகளும், மூட்டுகளும் நாளடைவில் பாதிக்கப்படக்கூடும்.
இதைக் கவனத்தில் கொண்டே நாற்காலி தயாரிப்பு நிறுவனங்கள், நாற்காலி வடிவமைப்பில் அதன் உயரம் மற்றும் முதுகெலும்பின் அமைப்புக்கு பொருத்தமாக வடிவமைப்புகளை ஆய்வு செய்து அமைக்கிறார்கள். வீடு அல்லது அலுவலகம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் நாற்காலிகள் தேர்வில் கவனம் அவசியம்.

நாற்காலி தேர்வுக்கான டிப்ஸ்
நாற்காலியின் உயரம் தரையில் இருந்து, அமரும் பகுதி வரை 16 முதல் 21 அங்குலம் இருக்கலாம். இந்த அளவில் தேவைக்கேற்ப மாற்றங்களை செய்து கொள்ளும் வகையில் நாற்காலியை தேர்வு செய்ய வேண்டும். நாற்காலியில் அமரும்போது பாதங்கள் தரையில் பதிந்திருக்க வேண்டும். தொடைகள் தரைக்கு கிடைமட்டமாகவும், கைகள் மேஜைக்கு கிடைமட்டமாகவும் இருக்க வேண்டும்.

நாற்காலி இருக்கையின் அகலம் 16 முதல் 18 அங்குலம் வரை இருக்கலாம். அதில் அமர்ந்து பின்புறம் சாய்ந்த நிலையில், மேஜை மேல் உள்ள பேப்பரில் எழுதவோ, புத்தகத்தை படிக்கவோ அல்லது கணினியில் பணியாற்றவோ எளிதாக இருக்க வேண்டும். இந்த அமைப்பு நாற்காலிக்கு இல்லாதபட்சத்தில், முன்புறமாக உடலை சாய்த்து பணிபுரிய வேண்டிய நிலை ஏற்படும். அதனால், பல மணி நேரம் பணியாற்று
பவர்களுக்கு முதுகெலும்பில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

முதுகெலும்பின் கீழ்ப்பகுதி நாற்காலியில் வசதியாக பொருந்தும்படி நாற்காலியின் வடிவமைப்பு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மணிக்கணக்காக உட்காருபவர்களின் முதுகெலும்பின் இயல்பான வளைவு நாளடைவில் பாதிக்கப்படக்கூடும். அதனால், நாற்காலி தக்க உயரம், அமரும் நிலை, சாயும் நிலை ஆகியவற்றில் முதுகெலும்புக்கு ஓய்வளிக்கும்படி இருப்பது அவசியம்.

சொகுசான குஷன்கள் அமைக்கப்பட்டுள்ள நாற்காலிகளை வாங்கும்போது, அதில் மூன்று நிமிடங்கள் உட்கார்ந்து பார்த்துவிட்டு, வசதியாக இருந்தால் மட்டுமே அந்த மாடலை வாங்கலாம்.

குஷன் இல்லாத மாடல்களுக்கு அமரும் பகுதியில் துளைகள் இருப்பது நல்லது. தற்போது விதவிதமான டிசைன்களில் துளைகள் கொண்ட நாற்காலிகள் கிடைக்கின்றன. நாற்காலியில் அமரும் போது, தரையிலிருந்து காற்று உடலில் படுவது அவசியம். 

பக்கவாட்டில் கைப்பிடி உள்ள நாற்காலிகளில் கைகளை வைப்பதற்கும், தோள்களுக்கும் வசதியாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். முன்புறம் உள்ள மேசையில் உள்ள நோட்டில் எழுதுவது, 
புத்தகத்தைப் படிப்பது, கணினியில் தட்டச்சு செய்வது ஆகிய நிலைகளில், முன் கை, நாற்காலியின் கைப்பிடியில் இடிப்பதுபோல இருப்பது கூடாது. அந்த நிலையில், முன்கை தசைகளும், நரம்புகளும் சோர்வுக்கு உள்ளாகலாம்.

சுழல் நாற்காலியை தேர்வு செய்யும்போது, அதில் அமர்பவர்கள் தங்களை அறியாமல் சுழலக்கூடும். அதனால், சீராக பணியாற்றுவதில் இடையூறு ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

மேலும் செய்திகள்