தலையணையை தேர்ந்தெடுப்பது எப்படி?

கழுத்துவலி உள்ளவர்களுக்கென்று பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ‘செர்விக்கல் பில்லோ’ (cervical pillow) தலையணைகள் சந்தையில் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

Update: 2022-01-31 05:30 GMT
ழுத்துவலி ஏற்படுவதற்கு நாம் பயன்படுத்தும் தலையணையும் முக்கியமான காரணமாகும். சிலர் இரண்டு அல்லது மூன்று தலையணைகளை தலைக்கு வைத்துப் படுப்பது உண்டு. இந்தப் பழக்கம் கழுத்து வலிக்கு வித்திடும். எனவே, எப்போதும் மென்மையான தலையணையை மட்டுமே பயன்படுத்துங்கள்.

படுக்கும்போது, முதுகின் நடுப்பகுதி மற்றும் தலையின் பின்பகுதி இரண்டும் ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தலையணையைப் பயன்படுத்துகிறோம். தலையணையை உயரமாக வைத்துக்கொண்டு தூங்கும்போது கழுத்து முன்னோக்கி இருக்கும். இதன் காரணமாக கழுத்து நரம்புகளில் சுளுக்கு மற்றும் வலி உண்டாகும். எனவே, மூன்று முதல் நான்கு அங்குலம் உயரம் உள்ள, மெல்லிய தலையணையைப் பயன்படுத்தினால் கழுத்துவலி இல்லாத நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

கழுத்துவலி உள்ளவர்களுக்கென்று பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ‘செர்விக்கல் பில்லோ’ (cervical pillow) தலையணைகள் சந்தையில் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

நீங்கள் பயன்படுத்தும் தலையணை கடினமாக இல்லாமல் மிருதுவாக இருக்க வேண்டும். இலவம் பஞ்சு தலையணை பயன்படுத்துவதற்கு மிகவும் ஏற்றது. ‘போம்’ (FOAM) தலையணைகளில் ‘மெமரி போம்’ (MEMORY FOAM) வகை தலையணையைப் பயன்படுத்தலாம். இந்த வகைத் தலையணையில் தலை வைத்துப் படுக்கும்போது, அதில் உள்ள ‘போம்’ அழுந்திவிடும். தலையை எடுத்த பிறகு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என்பதே இதன் சிறப்பம்சம். தலையணை பழையதாகிவிட்டால் அதில் படுத்துவிட்டு எழுந்திருக்கும்போது, உடனே அது பழைய நிலைக்குத் திரும்பாது. சற்று மெதுவாகத்தான் திரும்பும். இந்த அறிகுறி உங்கள் தலையணையில் தெரிந்தால் அதை உடனே மாற்ற வேண்டும். தலையணை மட்டுமில்லாமல் மெத்தைக்கும் இதுவே பொருந்தும்.

படுத்தவாறே புத்தகம் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் பார்ப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம். நடைப்பயிற்சியைத் தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பாக, கழுத்துக்கான ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகளைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்