இணையத்தில் தனிப்பட்ட புகைப்படங்களை கவனமுடன் பகிருங்கள்

உறவை மேம்படுத்த பல வழிகள் உள்ளன. தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துதான் நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு மாற்றுவழிகள் உள்ளதா என்பதை ஆராயுங்கள். ரகசியப் படங்களை அனுப்புவது உங்களுக்கு வசதியாக இல்லாவிட்டால், மாற்று வழிகளை பயன்படுத்துங்கள்.

Update: 2022-05-02 05:30 GMT
மூக வலைத்தளங்களில் பதிவிடும் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன. இணையத்தில், புகைப்படங்களை பதிவிடும் முன் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவற்றின் தொகுப்பு இங்கே:

தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்:
இணையம் வழியாகப் பகிரும் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறீர்களா? என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். பகிர்வதால் எந்த விதமான பயனும் இல்லாதபட்சத்தில், முடிந்தவரை அதைத் தவிர்க்க முயலுங்கள். தனிப்பட்ட புகைப்படங்களை அனைவருக்கும் பகிராமல் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மட்டும் அனுப்பலாம்.

நம்பிக்கையை உணருங்கள்:
தனிப்பட்ட எந்த தகவலையும் பிறருக்குப் பகிரும் போது, அந்த நபர் உங்களுக்கு நம்பகத்தன்மையுடன் இருப்பது கட்டாயம். எதிர்காலத்தில், அந்த நபரை நீங்கள் பிரிந்து செல்ல நேர்ந்தாலும், உங்கள் தனிப்பட்ட படங்கள், தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா? என்பதை உறுதி செய்யுங்கள். நீங்கள் நம்பிக்கை வைக்கும் நபர் பற்றி முதலில் முழுமையாக உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களைச் சார்ந்தவர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரைப் பற்றியும் தெரிந்துகொள்ளுதல் அவசியமானது.

மாற்றுவழி தேடுங்கள்:
உறவை மேம்படுத்த பல வழிகள் உள்ளன. தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துதான் நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு மாற்றுவழிகள் உள்ளதா என்பதை ஆராயுங்கள். ரகசியப் படங்களை அனுப்புவது உங்களுக்கு வசதியாக இல்லாவிட்டால், மாற்று வழிகளை பயன்படுத்துங்கள்.

முகத்தைக் காட்டாதீர்கள்:
தனிப்பட்ட படங்களை பிறருக்கு பகிர வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தால், இந்த விஷயத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்.  நெருக்கமான படங்களை பிறருக்குப் பகிர்வதில், முக்கிய விதி ஒன்று உள்ளது. அது, உங்கள் முகத்தைக் காட்டுவதை மறைப்பது. உங்கள், தனிப்பட்ட அடையாளங்களை முடிந்தவரை மறைக்கலாம். அதன் மூலம், உங்களின் நெருக்கமானவர்களைத் தவிர வேறு யாராவது அந்தப் படங்களைப் பார்க்க நேர்ந்தாலும், உங்கள் அடையாளமும், தனி உரிமையும் பாதுகாப்பாக இருக்கும்.

அடையாளங்களை மறையுங்கள்:
புகைப்படங்களைப் பிறருக்கு பகிர்வதில், கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், புகைப்படத்தில் உங்கள் அறை, வீடு அல்லது வேறு எந்தத் தகவலையும் கொடுக்கக்கூடாது. பின்னணியை முற்றிலும் மங்கலாக்கலாம் அல்லது வேறு  ஒரு பின்னணியை அமைக்கலாம். உங்கள் சுவரை மறைத்து வைக்க, காகிதங்கள் அல்லது வேறு ஏதாவது கொண்டு மூடலாம். அதேபோல், எந்த இடத்தில் இருந்து படங்களைப் பகிர்கிறீர்கள் என்ற தகவலையும் முடிந்தவரை மறையுங்கள். 

மேலும் செய்திகள்