பா.ஜனதாவினர், காந்தியை கொன்ற கோட்சே வம்சத்தினர் சித்தராமையா கடும் தாக்கு
பா.ஜனதாவினர், மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே வம்சத்தினர் என்று சித்தராமையா கடுமையாக சாடியுள்ளார்.;
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கொப்பலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்ேபாது அவர் கூறியதாவது:-
கோட்சே வம்சத்தினர்
பா.ஜனதாவில் சமூகநீதி எங்கு உள்ளது?. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பா.ஜனதாவில் டிக்கெட் வழங்கவில்லை. நான் ஒரு கொலைகாரன் என்று ஈசுவரப்பா சொல்கிறார். மகாத்மா காந்தியை கொன்றவர்கள் வாயில் வேறு என்ன வரும்?. அவர்கள் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே வம்சத்தினர்.
ஈசுவரப்பா அறிவு இல்லாதவர். மூளைக்கும், நாக்கிற்கும் தொடர்பு இல்லாமல் பேசுகிறார். ஈசுவரப்பா ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். அதிலும் குருபா சமூகத்தை சேர்ந்தவர். ஆனால் பா.ஜனதாவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு கூட டிக்கெட் வழங்கவில்லை. ஈசுவரப்பாவால் டிக்கெட் வாங்கி கொடுக்க முடிந்ததா?.
விலக வேண்டும்
சுயமரியாதை இருந்தால் ஈசுவரப்பா பா.ஜனதாவை விட்டு விலக வேண்டும். ஈசுவரப்பாவை காங்கிரசில் சேர்க்க மாட்டோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு காங்கிரசில் இடம் இல்லை.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து பா.ஜனதா தவறான கருத்துகளை கூறி வருகிறது. அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து செல்வது காங்கிரசின் கொள்கை. வாக்கு வங்கி அரசியலை செய்பவர்கள் பா.ஜனதாவினர்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.