அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் கனவு நிறைவேறியுள்ளது - எல்.கே.அத்வானி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதன் மூலம் தனது இதயத்திற்கு நெருக்கமான கனவி நிறைவேறியிருப்பதாக எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-05 01:00 GMT
புதுடெல்லி,

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனை முன்னிட்டு அயோத்தி நகரம் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டில், ராமஜன்ம பூமி இயக்கத்தின் போது, ​​ராம ரத யாத்திரை வடிவத்தில் முக்கிய கடமையை செய்து, அதன் மூலம் எண்ணற்றவர்களை ஒருங்கிணைக்க உதவியதை நினைத்து பெருமிதம் கொள்வதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

தனது இதயத்துக்கு நெருக்கமான கனவு நிறைவேறியிருப்பதாகவும், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்படுவது, தனக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஒரு உணர்வு பூர்வமான நாள் என்றும் அவர் கூறியுள்ளார். அயோத்தி ராமர் கோயிலானது,  இந்தியாவை ஒரு வலுவான, வளமான, அமைதியான மற்றும் இணக்கமான நாடாக பிரதிநிதித்துவப்படுத்தும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்