மதுபானம் குடிக்க வைத்து கல்லூரி மாணவி பலாத்காரம்: 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
பெங்களூருவில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.;
பெங்களூரு,
பெங்களூருவில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு விருந்துக்காக அந்த மாணவியும், அவருடன் படிக்கும் மாணவர் ஒருவரும் வெளியே சென்றுள்ளனர். அந்த மாணவர் தன்னுடன் நண்பர்கள் 2 பேரையும் அழைத்து வந்துள்ளார். பின்னர் அவர்கள் எலகங்காவில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
அங்கு வைத்து 3 பேரும் மது குடித்துள்ளனர். மேலும் மாணவியையும் அவர்கள் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்ததாக தெரிகிறது. பின்னர் மதுபோதையில் மயங்கிய மாணவியை, அவரது நண்பரான மாணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது நண்பர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.