அரியானாவில் வரும் 27ந்தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

அரியானாவில் வரும் 27ந்தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு இன்று நீட்டிக்கப்பட்டு உள்ளது.;

Update:2021-07-18 19:12 IST
அரியானாவில் வரும் 27ந்தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

சண்டிகர்,

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரியானாவில் வரும் 27ந்தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு இன்று நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை 50 சதவீத இருக்கைகளுடன் உணவு விடுதிகள், பார்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

இதேபோன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 50 சதவீதத்தினருடன் உடற்பயிற்சி கூடங்களை இயக்கவும் அரசு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்