துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் - தேர்தல் கமிஷன் தகவல்

மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர்.;

Update:2025-08-01 04:09 IST

சென்னை,

இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த ஆண்டு நடக்கவுள்ள இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வந்தது. துணை ஜனாதிபதி தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று துணை ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர்.

இதற்காக அந்த உறுப்பினர்களுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் தயாரிப்பது அவசியமாகும். அந்தவகையில் தற்போதைய தரவுகளுடன் வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் தயார் செய்து இறுதி செய்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்