வார்டு மறுவரையறை அறிக்கை 2 நாளில் அரசிடம் தாக்கல்

வார்டு மறுவரையறை அறிக்கை 2 நாட்களில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் கூறியுள்ளார்.

Update: 2022-05-25 17:22 GMT

பெங்களூரு:

வார்டு மறுவரையறை அறிக்கை 2 நாட்களில் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் கூறியுள்ளார்.

மாநகராட்சி தேர்தல்

198 வார்டுகளை கொண்ட பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடந்து 2 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டன. மேயர், துணை மேயர் இல்லாததால் வார்டுகளை கவனிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 198 வார்டுகளை 243 வார்டுகளாக உயர்த்தி மாநகராட்சி தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் மாநகராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக 8 வார காலஅவகாசம் அளித்து இருந்தது. இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நேற்று நிருபர்களிடம் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

2 நாட்களில் அறிக்கை தாக்கல்

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்தும் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு 8 வாரம் கால அவகாசம் அளித்து உள்ளது. மாநகராட்சி வார்டுகளை 198-ல் இருந்து 243 ஆக மறுவரையறை ெசய்ய வேண்டும். இதற்கான பணிகள் முடிந்து விட்டன. இன்னும் 2 நாட்களில் வார்டு மறுவரையறை அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு உள்ளன. மறுவரையறை செய்யும்போது சில வார்டுகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்படலாம். வார்டுகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு உள்ளதால் மாநகராட்சி உறுப்பினர்களின் கவுன்சில் கட்டிடமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மல்லத்தஹள்ளி கிராமமும் புதிய வார்டாக சேர்க்கப்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்