கர்நாடகத்தில் வறட்சியால் 251 விவசாயிகள் தற்கொலை

கர்நாடகத்தில் வறட்சி காரணமாக இதுவரை 251 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Update: 2023-10-18 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார் எம்.எல்.சி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.94 கோடி சிக்கியுள்ளது. காங்கிரஸ் அரசு கமிஷன் மூலம் இதுவரை ரூ.1,000 கோடி வசூலித்து இருப்பதாக தகவல் வந்துள்ளது. கலால், தொழில்துறை, எல்லா போலீஸ் நிலையங்களுக்கும் வசூல் இலக்கு நிர்ணயித்துள்ளனர். அதிகாரிகள் பணியிட மாற்றத்தின்போது லஞ்சம் பெற்றுள்ளனர்.

இவ்வாறு வசூலான பணத்தை சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற வேண்டும். பணம் சிக்கிய விவகாரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி கடந்த 2 நாட்களில் 117 இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளோம்.

பணம் சிக்கிய விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கர்நாடகத்தில் வறட்சி காரணமாக 251 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களது குடும்பங்களுக்கு ஒரு பைசா கூட நிவாரணம் வழங்கவில்லை.

தமிழகத்திற்கு தினமும் காவிரி நீரை திறந்து விடுகிறார்கள். ஐதராபாத்தில் ஜவுளித்துறை மந்திரி சிவானந்த பட்டீல் மீது ரூபாய் நோட்டுகளை வீசியது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு என்.ரவிக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்