சர்வதேச அளவில் தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்ப்பதில் பெங்களூருவுக்கு 5-வது இடம்; ஆய்வில் தகவல்

சர்வதேச அளவில் தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்ப்பதில் பெங்களூரு 5-வது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Update: 2022-06-17 15:01 GMT

பெங்களூரு:

பொருளாதார வளர்ச்சி

சர்வதேச அளவில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறி வருகிறது. நாட்டின் வளர்ச்சி என்பது மக்கள் தொகை பெருக்கத்தால் அல்ல. பொருளாதாரத்தின் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சியாகும். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி பாதையை நோக்கி அசுர வேகத்தில் செல்கிறது. மத்திய அரசு நாட்டை பொருளாதார அடிப்படையில் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதற்காக ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வழிவகைகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்த நிலையில் அதன் பயனாக இந்தியாவில் மருத்துவம், மின்உற்பத்தி போன்ற பல துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் என்று அழைக்கப்படும் தொழில் நிறுவனங்கள் அதிக பங்கினை கொண்டுள்ளன. நடப்பு ஆண்டில் சர்வதேச அளவில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து லண்டனை சேர்ந்த வளர்ச்சி மதிப்பீட்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிலிக்கான் பள்ளத்தாக்கு

உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரு நகரம் அதிகளவு தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்த்துள்ளது. சர்வதேச அளவில் தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்ப்பதில் பெங்களூரு நகரம் 5-வது இடத்தில் உள்ளது. பெங்களூருவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் மும்பை,

டெல்லி மற்றும் தெலங்கானா மற்றும் கேரளா நகரங்கள் முதலீடுகளை ஈர்த்துள்ளன.

சர்வதேச புத்தொழில் சுற்றுச்சூழலில் கடந்த ஆண்டுகளில் சீனாவின் பீஜிங், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் கொரியா ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி போன்ற

இந்திய நகரங்கள் போட்டியில் இறங்கியுள்ளன. இந்த பட்டியலில் பெங்களூரு 22-வது இடத்திற்கு வந்துள்ளது. இதற்கு பெங்களுருவில் ஐ.டி. தொழில்நிறுவனங்களின் வருகை மற்றும் பங்களிப்பு தான் முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. பெங்களூருவுக்கு அடுத்தப்படியாக தலைநகர் டெல்லி 26-வது இடத்திலும், மும்பை 36-வது இடத்திலும் உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வலிமை நிலை

இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகங்களில் பெங்களூரு வலிமையான நிலையை பெற்றுள்ளது. முதலீடு அடிப்படையில் சிங்கப்பூரையும் டோக்கியோவையும் பெங்களூரு பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்