கோலார் தங்கவயல் இ.டி.பிளாக் மாரியம்மன் கோவில் திருவிழா
கோலார் தங்கவயல் இ.டி பிளாக் மாரியம்மன் கோவில் திருவிழாவில் 1008 பால்குடத்துடன் பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.;
கோலார் தங்கவயல்:
கோலார் தங்கவயலில் இ.டி.பிளாக் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அடி மாதத்தை முன்னிட்டு நடக்கும் திருவிழாவில் அம்மன் தேர் ஊர்வலமும், 1,008 பால் குடம் ஏந்தி பெண்கள் ஊர்வலமாக சென்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வார்கள். அதன்படி நேற்று மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் ராபர்சட்சன்பேட்டை பகுதியில் இருந்து 1,008 பெண்கள் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பால்குட ஊர்வலத்தை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பூஷ்ப ரதத்தில் அம்மன் எழுந்தருளிய தேர் ஊர்வலமாக சென்றது.
பால்குடம் ஏந்திய பெண்கள் ஓம் சக்தி என்று கோஷமிட்டு பக்தி பரவசமடைந்தனர். இந்த பால்குடம் ஊர்வலம் ராபர்சன்பேட்டை முக்கிய சர்க்கிள், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சாலை, சல்டானா சர்க்கிள் மார்க்கமாக கோவிலை சென்றடைந்தது. பின்னர் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக சென்ற பெண்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.