பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த டாக்டர்கள்-நர்சுகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூருவில் அரசு ஒப்பந்த டாக்டர்கள், நர்சுகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.;

Update:2022-07-07 20:59 IST

பெங்களூரு:

ஒப்பந்த ஊழியர்கள்

கா்நாடகத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மருத்துவ கல்வித்துறையின் கீழ் டாக்டர்கள், நர்சுகள், லேப்-டெக்னிஷியன்கள், பிற ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு பணியாற்றும் அரசு டாக்டர்கள், நர்சுகள், பிற ஊழியர்கள் சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்டவற்றை நிறைவேற்றி கொடுக்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதுதவிர ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சீனிவாச்சாரி, ஒப்பந்த ஊழியர்கள் பற்றிய அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்திருந்தார்.

அவரது அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்றும் ஊழியர்கள், அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் சுகாதாரத்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் உள்ளது. இதையடுத்து, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சுகாதாரத்துறை ஊழியர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

வேலை நிறுத்த போராட்டம்

அதன்படி, ஒப்பந்த டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள், பெங்களூரு சுதந்திர பூங்காவில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்திற்கு மேல்-சபை உறுப்பினர் ஆயனூர் மஞ்சுநாத்தும் ஆதரவு தெரிவித்து சுதந்திர பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.

சுகாதாரத்துறை ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளில் ஒப்பந்த டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளில் நடைபெறும் வழக்கமான பணிகள் தேங்கி உள்ளது. இந்த போராட்டம் தொடர்ந்து நீடித்தால் தாலுகா, பிற கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்