மந்திரி சபை விரிவாக்கத்திற்கு பிறகு மக்கள் பிரச்சினைகளை தீர்க்க 100 நாள் திட்டம்- ஏக்நாத் ஷிண்டே தகவல்

மந்திரி சபை விரிவாக்கத்திற்கு பிறகு மக்கள் பிரச்சினைகளை தீர்க்க 100 நாள் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.;

Update:2022-07-24 17:34 IST

மும்பை, 

மந்திரி சபை விரிவாக்கத்திற்கு பிறகு மக்கள் பிரச்சினைகளை தீர்க்க 100 நாள் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

100 நாள் திட்டம்

கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மராட்டியத்தில் மக்கள் பல வகையான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அதற்காக மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு 100 நாள் திட்டம் தொடங்கப்படும்.

மோடி கேட்டுக்கொண்டார்

தொழிலாளர்களும், நடைபாதை வியாபாரிகளும் சமூகத்தில் முக்கியமானவர்கள். அவர்களின் மேம்பாட்டை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக்கொண்டார். கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி பகுதியில் மேம்பாட்டு திட்டங்களை தயார் செய்யுங்கள். உடனடியாக ஒப்புதல் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே நிகழ்ச்சி நடந்த போது சில நடைபாதை வியாபாரிகள் கோஷங்களை எழுப்பி கொண்டு இருந்தனர். முதல்-மந்திரியிடம் தங்களது குறைகளை கூற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்